சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொலியில், காய்கறி சந்தைகளில் விற்பனையாளர்கள் கையாளும் நூதனமான சந்தைப்படுத்தல் முறை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. காய்கறிகளை மிகவும் பசுமையாகவும், கவர்ச்சியாகவும் காட்டுவதற்காக வியாபாரிகள் அந்தந்த காய்கறிகளின் நிறத்திற்கு ஏற்ப மின்விளக்குகளைப் பயன்படுத்துவது அந்தக் காணொலியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Mohit Bhandari (@mohit_bhandari012)

குறிப்பாகத் தக்காளிக்குச் சிவப்பு நிற விளக்குகளையும், உருளைக்கிழங்கிற்கு மஞ்சள் நிற விளக்குகளையும், பூண்டிற்கு வெள்ளை நிற விளக்குகளையும் அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பழைய காய்கறிகள் கூடப் புதியவை போல மின்னும் என்பதால், பொதுமக்கள் ஏமாற வாய்ப்புள்ளதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நூதன முறையைக் கண்டு வியந்த பலரும், இனி காய்கறிகளை இரவு நேரங்களில் வாங்குவதை விட பகல் பொழுதில் வாங்குவதே சிறந்தது என நகைச்சுவையாகவும் எச்சரிக்கையாகவும் பதிவிட்டு வருகின்றனர்.