தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி (தவாக), தங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த முறையைப் போலவே இந்த முறையும் ஒரே ஒரு தொகுதியை மட்டும் ஏற்பதை ஏற்க முடியாது என தவாக நிர்வாகிகள் அக்கட்சியின் தலைவர் வேல்முருகனிடம் கொந்தளித்துள்ளனர். பெயரளவு கட்சிகளையும் (Letter Pad Parties), கடந்த 15 ஆண்டுகளாக அரசியலில் இயங்கி வரும் தவாக-வையும் ஒன்றாகக் கருதுவதா என அவர்கள் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தங்களது கௌரவத்தை நிலைநாட்ட, நிர்வாகிகள் வேல்முருகனிடம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்:

அதன்படி குறைந்தது 3 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். 1 ராஜ்யசபா சீட் அல்லது உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவி மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட வேண்டும்.

தவாக-வின் இந்தக் கடுமையான நிலைப்பாட்டையும், கூடுதல் தொகுதிகள் கோரிக்கையையும் திமுக தலைமை ஏற்குமா அல்லது கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.