தமிழகத்தில் இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் அறிவித்துள்ளார்
அதாவது சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வு எழுத வந்த 150-க்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு, ஹால்டிக்கெட் இருந்தும் போதிய இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தேர்வர்கள் அந்த இடத்திலேயே போராட்டத்தில் குதித்தனர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாகவே தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தத் திடீர் ரத்து அறிவிப்பு தமிழகம் முழுவதும் தேர்வுக்காகக் காத்திருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
