1427 நாட்களுக்குப் பிறகு தல தோனி சேப்பாக் மைதானத்தில் நுழையவுள்ளதால் ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர்..

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் அட்டவணை வந்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் மார்ச் 31 முதல் மே 21 வரை நடைபெறும். முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இறுதிப் போட்டி மே 28ஆம் தேதி நடைபெறும். இம்முறை ஒவ்வொரு அணிகளுடைய சொந்த மைதானங்களில் போட்டிகள் நடைபெறுவதால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குறிப்பாக தோனியின் ரசிகர்கள், சிஎஸ்கே ரசிகர்கள்.. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மிஸ்டர் கூல் மகேந்திர சிங் தோனியை பார்க்க ஆவலாக உள்ளனர். சரியாக மூன்றாண்டுகளுக்குப் பிறகு.. புள்ளி விவரங்கள் உட்பட கணக்கிட்டால்,  1427 நாட்களுக்குப் பிறகு, சேப்பாக்கத்துக்குள் நுழைகிறார் தோனி.. ரசிகர்கள் ட்வீட் மூலம் ஆரவாரம் செய்து வருகின்றனர். சிஎஸ்கே தனது சொந்த மைதானத்தில் 7 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதன்படி ஏப்ரல் 3, 12, 21, 30, மே 6, 10, 14 ஆகிய தேதிகளில் சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே போட்டி நடைபெறும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் போட்டிகள் : (A வெளியூர் மைதானம் ), (H சேப்பாக் மைதானம் )

மார்ச் 31 – எதிராக குஜராத் டைட்டன்ஸ் (A), ஏப்ரல் 3 – எதிராக லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் (H), ஏப்ரல் 8 – எதிராக மும்பை இந்தியன்ஸ் (A), ஏப்ரல் 12 – எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் (H), ஏப்ரல் 17 – எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (A) , ஏப்ரல் 21 – vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (H), ஏப்ரல் 23 – vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (A), ஏப்ரல் 27 – எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் (A), ஏப்ரல் 30 – vs பஞ்சாப் கிங்ஸ் (H), மே 4 – vs லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் (A), மே 6 – vs மும்பை இந்தியன்ஸ் (H), மே 10 – vs டெல்லி கேபிடல்ஸ் (H), மே 14 – எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (H), மே 20 – எதிராக டெல்லி கேபிடல்ஸ் (A).

மகேந்திர சிங் தோனி, கான்வே, ருத்துராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சேனாபதி, மொயீன் அலி, சிவம் துபே, ஹங்கர்கேகர், பிரிட்டோரியஸ், சாண்ட்னார், ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சவுத்ரி, பத்திரனா, சிமர்ஜீத் சிங், தீபக் சாஹர், சோலங்கி, திக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, ஷேக் ரஷித், பென் ஸ்டோக்ஸ், நிஷாந்த் சிந்து, கைலி ஜாமிசன், பகத் வர்மா, அஜய் மண்டல்.

2023 ஐபிஎல் முழு அட்டவணை :