மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் நடந்த  பரிதாபமான சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. தந்தை புற்றுநோயால் காலமானதும், தாய் வீட்டை விட்டு வெளியேறியதும் காரணமாக, 13 வயதான தன்வி என்ற சிறுமி, தனது மாமா மற்றும் காவல் துணை ஆய்வாளர் முன்ஷிலால் ஆதிவாசியுடன் வசித்து வந்துள்ளார்.

சிறுமி பிறந்ததிலிருந்து மனரீதியாக பலவீனமடைந்தவர் என்றும், பள்ளிக்கு சென்றும் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை, வீட்டின் தரை தளத்தில் துப்பட்டாவுடன் விளையாடிக் கொண்டிருந்த தன்வி, தற்செயலாக கழுத்தில் சுற்றிய துப்பட்டா மூச்சுத் திணறலுக்கு காரணமாகி உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த  காவல்துறையினர், உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். சிறுமி தரையில் மரணமடைந்த நிலையில் கிடந்ததாகவும், கழுத்தில் துப்பட்டா பலமாக இறுக்கப்பட்டுள்ளதாக   உறவினர்கள் தெரிவித்தனர்.  போலீசார்  விசாரணையை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

சிறுமி உண்மையில் மனரீதியாக பலவீனமடைந்திருந்ததை உறுதிப்படுத்தியதோடு, இது தற்கொலையா அல்லது தற்செயலா என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் முழு பகுதியில் சோகத்தையும், கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது.