13 அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ரெடி என்று BJP தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரையில் கட்சி கூட்டத்தில் பேசிய அவர், “திமுக ஆட்சிக்கு வந்த பின் எந்தெந்த துறைகளில் பின்னடைவை சந்தித்துள்ளது என்பதை பாருங்கள். தற்போது 13 அமைச்சர்கள் ஊழல் பட்டியல் நம்மிடம் உள்ளது. இவை ஒவ்வொன்றாக இந்த மாத ஜனவரி இறுதியில் வெளியிடுவோம்.

அதை ஆதாரமாக வைத்து திமுகவின் உண்மை முகத்தை மக்களிடம் காட்டுங்கள். தமிழகத்தை பொறுத்தவரையிலும் திமுக தான் அரசியல் ரீதியிலான ஒரே எதிரி. திமுகவினரின் ஊழல், முறைகேடு, லஞ்சம், வாரிசு அரசியல் விமர்சனத்துக்குரியது” என அவர் தெரிவித்துள்ளார்.