கும்பகோணம் பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு பயிலும் 12 வயதுள்ள மாணவி அகஸ்தி என்பவர், “குண்டான் சட்டி” எனும் அனிமேஷன் திரைப்படத்தை டைரக்டு செய்துள்ளார். இதை ஏ.எஸ்.கார்த்திகேயன் தயாரித்து உள்ளார். கடந்த 8 மாதங்களாக தொழில்நுட்ப வல்லுனர்கள் உடன் இணைந்து மாணவி இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்.

இப்படத்திற்கு அரசங்கன் சின்னத்தம்பி என்பவர் திரைக் கதை வசனம் எழுதியிருக்கிறார். அதன்பின் அமர்கீத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அகஸ்தி, காட்சிகள் எப்படி வர வேண்டும் என்பதை சொல்லச் சொல்ல அனிமேஷன் டெக்னீஷியன்கள் அதை உருவாக்கி இருக்கின்றனர்.