கடந்த 2013 ஆம் வருடம் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியாகிய ஹிந்தி படம் ராஞ்சனா. இதில் அவருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்து இருந்தார். 2-வது நாயகியாக ஸ்வரா பாஸ்கர் நடித்தார். ஹிந்தி திரைப்படங்களில் போல்டான கதாபாத்திரங்களில் இவர் நடித்து வருகிறார். மேலும் ஸ்வரா பாஸ்கர் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார். இந்நிலையில் தன் நீண்டநாள் காதலரான பகத் அகமது என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் ஸ்வரா பாஸ்கர்.

இதில் பகத் அகமது சமாஜ்வாதி கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்து வருகிறார். அவர்களின் கல்யாணம் எளிமையான முறையில் பதிவுத் திருமணமாக நடைபெற்று உள்ளது. விரைவில் மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தவும் திட்டமிட்டு உள்ளார்கள். நடிகை ஸ்வரா பாஸ்கர் – பகத் அஹமதுவின் திருமண புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியானதை அடுத்து ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.