ஆப்பிரிக்காவின் சஹேல் பிராந்தியத்தில் நாடோடிகளாக வாழ்ந்து வரும் ‘வோடாபே’ (Wodaabe) என்ற பழங்குடியின மக்களின் ஆச்சரியமூட்டும் வாழ்வியலும், பெண்களின் திருமண சுதந்திரமும் உலகளவில் தற்பொழுது மிக உற்றுநோக்கப்படும் தனித்துவமான கலாச்சாரமாக மாறியுள்ளது.

நவீன உலகிற்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ள இந்த சமூகத்தில், வழக்கமான நடைமுறைகளுக்கு மாறாக ஆண்கள்தான் தங்களை அதீதமாக அழகுபடுத்திக் கொண்டு பெண்களைக் கவர்வதற்காகப் பாரம்பரிய நடனமாடும் வழக்கம் தொன்றுதொட்டு நிலவி வருகிறது.

குறிப்பாக, இவர்களின் கலாச்சார பெருமையின் அடையாளமாகத் திகழும் வருடாந்திர ‘கெரேவோல்’ (Gerewol) திருவிழாவின் போது, ஆண்கள் பல மணி நேரம் நீண்ட ஒப்பனைகளைச் செய்து, வண்ணமயமான பாரம்பரிய உடைகளை அணிந்து தங்கள் அழகை வெளிப்படுத்துகிறார்கள்.

அதைவிட விந்தையாக, இந்த சமூகத்தில் பெண்களுக்கு திருமண விஷயத்தில்  சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது; ஒரு பெண் தனது விருப்பத்திற்கு ஏற்ப துணையைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதுடன், திருமணத்திற்குப் பிறகும் கூடத் தனது கணவரைப் பிரிந்து மற்றொருவரைத் தேர்ந்தெடுக்கும் முற்போக்கான உரிமையைப் பெற்றுள்ளார்.

இதன் காரணமாக வோடாபே சமூகத்தில் ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களைக் கொண்டிருக்கவும் அனுமதிக்கப்படுவது, நவீன காலத்திலும்கூட இப்பழங்குடியினரை உலகளவில் மிகவும் வியக்கத்தக்கவர்களாகவும் தனித்துவமானவர்களாகவும் அடையாளப்படுத்துகிறது.”