இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் கிருஷ்ணன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் செயற்கை நுண்ணறிவு கொள்கை ஆலோசகர் பதவியிலிருந்து ஜூன் 2026 இறுதியில் விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 18 மாதங்களாக வெள்ளை மாளிகையில் பணியாற்றிய அவர், அமெரிக்காவின் ‘AI ஆக்ஷன் பிளான்’ மற்றும் தேசிய அளவிலான கொள்கை கட்டமைப்புகளை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார்.

மேலும் தனது பதவிக்காலம் குறித்து பெருமிதம் தெரிவித்துள்ள அவர், தற்போதைய அமெரிக்காவின் AI வளர்ச்சிக்கு அதிபர் ட்ரம்ப்பின் தலைமையே முக்கிய காரணம் என்று பாராட்டியுள்ளார். பதவியிலிருந்து விலகிய பிறகு சிறிது காலம் ஓய்வெடுக்கப் போவதாகவும், அதன் பின்னர் அமெரிக்காவின் முன் உள்ள பெரிய AI சவால்களை எதிர்கொள்ளும் புதிய பணிகளில் ஈடுபடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட ஸ்ரீராம் கிருஷ்ணன், இதற்கு முன்பு மைக்ரோசாப்ட், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் ஸ்னாப் போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மேலும், எலான் மஸ்க்கிற்கு நெருக்கமான ஆலோசகராகவும், ட்விட்டர் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகித்தவராகவும் அறியப்படுகிறார்.