ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை ஆண்டு அறிக்கை மீதான விவாதத்தின்போது, பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதிநிதி ஆசிம் இப்திகார் அகமது காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்து, அது பாதுகாப்பு சபை தீர்மானங்களின்படி தீர்க்கப்பட வேண்டும் எனப் பேசினார்.
பாகிஸ்தானின் இந்த வழக்கமான காழ்ப்புணர்ச்சிப் பேச்சுக்கு ஐ.நா. சபையிலேயே இந்தியா உடனடியாக மிகக் கடுமையான கண்டனத்தையும் பதிலடியையும் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாகப் பேசிய இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ், ஐ.நா. பாதுகாப்பு சபையின் உறுப்பினராக இருப்பது ஒரு மிகப்பெரிய பொறுப்பு என்பதை பாகிஸ்தானுக்கு நினைவூட்ட விரும்புவதாகக் சாடினார்.
ஐ.நா. மன்றம் என்பது பாரபட்சமான, பொய்யான கருத்துக்களைப் பரப்புவதற்கோ, பாகிஸ்தான் தனது சுய அரசியல் நோக்கங்களை முன்னெடுப்பதற்கோ ஆன தளம் அல்ல என்று எச்சரித்தார்.
மேலும், ஜம்மு காஷ்மீர் எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்கமுடியாத பகுதி என்றும், பாகிஸ்தானின் வெற்றுப் பேச்சுகளாலோ, ஆதாரமற்ற வரலாற்று முரண் கூற்றுகளாலோஇந்த அடிப்படை யதார்த்தத்தை ஒருபோதும் மாற்றிவிட முடியாது என்றும் நெத்தியடியாகக் குறிப்பிட்ட அவர், ஐ.நா. பாதுகாப்பு சபையில் உடனடி சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
