“தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் விமர்சனங்களுக்குத் தமிழக வெற்றிக் கழகம்  தற்பொழுது எக்ஸ் (X) சமூகவலைதளப் பக்கத்தில் மிகக் கடுமையான மற்றும் அதிரடியான பதிலடியைக் கொடுத்துள்ளது.

‘கூட்டணியை நாங்கள்தான் அனுப்பி வைத்தோம் என்று பெருந்தன்மை பேசிவிட்டு, தற்பொழுது அவர்களை ஏக வசனத்தில் ஏசுவது எந்த வகையில் சேரும்?’ என்று கேள்வி எழுப்பியுள்ள த.வெ.க, கூட்டணி என்ற பெயரில் உடனிருக்கும் கட்சிகளின் மீது சவாரி செய்து அரசியல் ஆதாயங்களை மட்டும் அனுபவிக்கும் சுயநலமிக்க தீய சக்தி தங்களது கட்சி அல்ல என்று சாடியுள்ளது.

தாங்கள் மக்கள் சக்தியின் ஆதரவால் தனிப்பெரும் கட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜனநாயகச் சக்திகளின் ஆதரவோடு, அவர்களுக்கு முழு மனத்துடன் ஆட்சியில் பங்கையும் அதிகாரப் பகிர்வையும் அளித்து மனசாட்சியுள்ள மக்களாட்சியை அமைத்திருப்பதாகத் த.வெ.க விவரித்துள்ளது.

“>

மேலும், ‘ஆட்சி என்றால் தனக்கு மட்டுமே, அதிகாரம் என்றால் தன் குடும்பத்திற்கு மட்டுமே’ என்று தி.மு.க-வைச் சாடியுள்ள அக்காட்சி, ஆட்சிக் கட்டில் கனவிலேயே தூங்கும் ஸ்டாலினைச் சுற்றி இருப்பவர்கள் தொட்டிலில் போட்டுப் புட்டிப்பால் கொடுத்து ஏமாற்றுவதைச் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இப்படியே இருந்தால் கொளத்தூரையும் கோட்டையையும் இழந்தது போல ஒட்டுமொத்தத்தையும் இழப்பது உறுதி என்றும், ஸ்டாலினின் கொத்தடிமைக் கூட்டமே அவருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் மிக ஆவேசமாக எச்சரித்துள்ளது.”