உத்தரகண்ட் மாநிலத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக வீடுகளுக்கு வெளியே பிச்சை எடுத்து வந்துள்ளார். சமீபத்தில் அப்பகுதியினரால் அவரை அங்கிருந்து நீக்க முயற்சி செய்யப்பட்டபோது, அவரிடம் இருந்த இரண்டு பைகளில் பெரிய அளவில் பணம் இருப்பது தெரியவந்தது.

அதில் ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்புடைய காசுகள், நோட்டுகள் அடங்கியிருந்தன. இந்த தகவல் அப்பகுதியில் பரவி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதிகாலை தொடங்கிய பண எண்ணிக்கை மாலை வரை தொடர்ந்தது. ஏற்கனவே ரூ.1 லட்சத்துக்கும் மேல் எண்ணப்பட்டு விட்டதாகவும், இன்னும் பணம் முழுமையாக எண்ணப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“>

 

உடனடியாக மங்களூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அந்த பணத்தை பாதுகாப்பாக கைப்பற்றினர். மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சாதாரணமாக பிச்சை எடுத்து வந்த ஒரு பெண் இவ்வளவு பணத்தை எப்படி குவித்துள்ளார் என்பது மக்களை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.