தமிழகத்தில் நேற்று முன்தினம் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் இதில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து தோல்வி அடைந்தோர் மற்றும் தேர்வை எழுதாத மாணவர்களுக்காக துணை தேர்வை ஜூன் மாதம் 27ஆம் தேதி நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதே சமயம் துணைத் தேர்வுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பனிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வு ஜூன் 19 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறும்.
11 ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஜூன் 27 முதல் ஜூலை 5ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிளஸ் 2துறை தேர்வுக்கு தேர்வர்கள் மே 11ஆம் தேதி அதாவது நாளை முதல் மே 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இது குறித்து கூடுதல் தகவல்களை அறிய http://dge.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.