தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் முறை விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.

ரொக்கமற்ற பணம் பரிவர்த்தனைக்காக ஏற்கனவே 12 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் யு பி ஐ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூட்டுறவு சங்க பதிவாளர் தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்ட ரேஷன் கடைகளிலும் வருகின்ற மே 31ஆம் தேதிக்குள் பேடிஎம், கூகுள் பே, போன் பே மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.