
கடந்த 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வியடைந்தது இதையடுத்து அங்கு எதிர்க்கட்சிகளாக இருந்த ஷபாஷ் ஷரீஃப் தலைமையில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த வருடம் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கடந்த மே 9ஆம் தேதி இம்ரான் கான் இஸ்லாமாபாத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
தேர்தல் குறித்து தற்போதைய பிரதமர் ஷபாஷ் ஷெரீப் செய்தியாளர்களிடம் பேசியபோது, கூட்டணி கட்சிகளின் ஆலோசனையுடன் ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு முன் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என தெரிவித்தார். அடுத்த தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் தெரிவிக்கும் என்றும் கூறியுள்ளார்.