மிதுனம் ராசி அன்பர்களே, 

இன்று அனைவரிடமும் எதார்த்தமாக பேசுவீர்கள் அற்புதமாக காய் நகர்த்தி வெற்றி பெறுவீர்கள். திட்டமிட்ட பயணத்தில் திடீர் மாற்றத்தை மேற்கொள்வீர்கள். புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளித்து விடுவீர்கள். மற்றவர்கள் உங்கள் மீது அக்கறை கொள்வார்கள். தொழில் வியாபாரம் அற்புதமாக நடக்கும். இனிய பயணங்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரம் விரிவாக்கம் செய்ய போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். செய்யும் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். இடையூறுகள் எல்லாம் விலகி செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி சுமை அதிகரிக்கும். பெண்களுக்கு இன்று நினைத்த வாழ்க்கை அமையும். வேண்டியவற்றை பெற்றுக் கொள்வீர்கள். மனமகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்று மாணவர்கள் கல்வி மீது அக்கறை கொள்வீர்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். முயற்சி செய்தால் வெற்றி பெற முடியும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: இரண்டு மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்