பெங்களூரில் 75 சமையல் கலைஞர்கள் இணைந்து உலகின் மிகவும் நீளமான தோசையை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். MTR ஃபுட்ஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 123.03 அடி நீளம் கொண்ட தோசையை உருவாக்கினர். 110 முறை தோல்வியை தழுவிய சமையல் கலைஞர்கள் பல்வேறு திட்டமிடங்களுக்கு பின்னர் இதனை சாதித்துள்ளனர். இதற்கு முன்னர் 54 அடி நீளமான தோசை உலகில் நீளமான தோசையாக சாதனை பட்டியலில் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.