இந்தியாவில் மத்திய அரசு உதவியுடன் பிரதமர் மோடியால் கடந்த 2015 ஆம் ஆண்டு சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இது செல்வமகள் சேமிப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. 18 வயதிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளுக்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் பெண் குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் திருமணத்திற்கு உதவுவதுதான் முக்கிய நோக்கம். இந்த திட்டத்தில் இணைய விரும்பும் நபர்கள் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தையாக இருக்க வேண்டும். தபால் நிலையங்களில் அல்லது வங்கிகளில் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் அவர்களது பெயரில் கணக்கு தொடங்கி 1000 ரூபாயை வைத்து தொகையாக செலுத்த வேண்டும்.

இந்த வைப்பு தொகை ஆண்டுக்கு ஒரு முறை என 21 ஆண்டுகள் பெறப்படும். முதலீட்டாளர்கள் ஆயிரம் ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை வைப்புத் தொகையாக செலுத்த முடியும். இவ்வாறு சேமிக்கப்படும் வாய்ப்புத் தொகைக்கு அரசு ஆண்டுக்கு 7.6 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதற்கு வரி விலக்கு உண்டு. இந்த தொகையை 21 ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது 18 வயது பூர்த்தி அடைந்த பின்னர் தங்களுடைய திருமணத்திற்கு அல்லது உயர் கல்விக்காக பயனர்கள் பெற்றுக் கொள்ள முடியும். உங்களுடைய பெண் குழந்தைக்கும் நீங்கள் சேமிக்க விரும்பினால் உடனே அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகுங்கள்.