இன்றைய காலத்தில் மக்கள் பல்வேறு பொருட்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் வாங்குகின்றனர். அப்படி வாங்கும் பொருள்களின் சேவையில் அதிருப்தி அடைந்தால் தேசிய நுகர்வோர் உதவி மையத்தில் புகார் செய்யலாம். இதற்கு 1800-11-4000, 1915 என்ற ஹெல்ப்லைன் எண்ணில் புகார் அளிக்கலாம். மேலும் 8800001915 என்ற எண்ணில் உங்கள் புகார்களை எஸ்எம்எஸ் மூலமாக அனுப்பலாம். அரசு இணையதளத்திலும் குறைதீர்க்கும் வசதி உள்ளது.