வயதான காலத்தில் மாதந்தோறும் வருமானம் பெற விரும்பினால் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். வைப்புத் தொகைக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படும். 30 லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு ஆண்டுக்கு 2.46 லட்சம் வட்டி கிடைக்கும். அதாவது மாதம் 20 ஆயிரத்து 500 ரூபாய் பெறலாம். வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களை தொடர்பு கொண்டு ஒருவர் இந்த திட்டத்தில் தனியாக அல்லது மனைவியுடன் சேர்ந்து திட்டத்தை தொடங்கலாம்.