தமிழக பாஜக நடத்தி வரும் எண் மண், எண் மக்கள்  யாத்திரையில் பேசிய அக்கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணண்மாலை, தமிழகத்தில் இருக்கக்கூடிய குடும்ப தலைவிகள் 2 கோடியே 27 லட்சம். ஏன்னா அதனை பேரின் ரேஷன் கார்டுல…  குடும்ப தலைவி பெயர் இருக்கு. இவங்க கொடுக்குறது 1  கோடியே 6 லட்சம்…. அதுலயும் சில பேருக்கு ஒருவா வந்திருக்கு…. சில பேருக்கு அமாவாசை அன்னைக்கு வந்தது.. சில பேருக்கு மெசேஜ் மட்டும் வந்திருக்கு..

சில பேருக்கு ஆயிரம் ரூபாய் வந்துட்டு,  காணாம போயிடுச்சு.. அவுங்க  சொன்ன 1 கோடியே 6 லட்சம் கணக்குல..உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ? 60% குடும்ப தலைவிகளுக்கு தமிழகத்திலே உரிமை தொகை வரவில்லை என்பதுதான் நிச்சயம். அதுவும் இந்த குடும்ப உரிமை தொகையை கூட ஏமாத்தினார்கள். எப்படி ஏமாத்துறாங்க பாருங்க ? ஒத்தையா கொடுத்து,  கத்தையே எடுப்பான் என்று  நம்ம ஊர்ல சொல்லுவாங்க.

50% சொத்து வரி உயர்த்தியாச்சு, 50 சதவீதம் மின்சார கட்டணம்  கட்டணத்தை உயர்த்தியாச்சு, 30 சதவீதம் குடிநீர் வரியை உயர்த்தியாச்சு லஞ்சம் லாவண்யம் 40 சதவீதத்துக்கு வந்துருச்சு. விலைவாசி உயர்த்தியாச்சு… சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் விலை எல்லாம் உயர்த்திட்டு,  ஒத்தையா ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு…  கத்தையா  அள்ளிக்கிட்டு இருக்காரு நம்முடைய அண்ணன் மு.க ஸ்டாலின் அவர்கள்.

இதை  கோயம்புத்தூர் மக்கள் புரிஞ்சிப்பீங்க. எங்க பிராடு நடக்குதுன்னு கண்டுபிடிச்சீடுவிங்க…  இந்தியாவில் அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் 7,53,000 கோடி. இதுல சிம்பிளா சொல்லனும்னா…. ஒரு ஒரு தனி மனிதனுடைய தலையின் மீது….. குடும்பத்தில் இருக்கக்கூடிய தனி மனிதனுடைய தலையின் மீது…..  3  லட்சம் ரூபாய் கடன் இருக்கு என தெரிவித்தார்.