100 Mbps இணையவேகம் மற்றும் ஒரு ஆண்டுக்கு இலவச OTT கொடுக்கும் BSNL நிறுவனத்தின் ரூ.799 ப்ரீப்பெய்ட் திட்டம் குறித்து நாம் தற்போது தெரிந்துக்கொள்வோம். இத்திட்டத்தில் எந்த நெட்வொர்க்கிலும் 24 மணி நேரத்திற்கு இலவச வரம்பற்ற அழைப்பின் பலனை பெறுவீர்கள். இணையவேகமானது 100 Mbps வேகத்தில் வரம்பற்று கிடைக்கும். மேலும் 1000ஜிபி டேட்டா கிடைக்கும். அதே சமயத்தில் டேட்டா முடிந்தபின்பும் 5Mbps வேகத்தில் இணையத்தை பயன்படுத்த இயலும்.

அதேபோல் ஏர்டெல்லின் ரூ.799 திட்டத்தில் 100Mbps வேகத்தில் இணையம் கிடைக்கும். இதில் மொத்தம் 3.3TB டேட்டாவானது வழங்கப்படுகிறது. அதே சமயத்தில் வின்க் மியூசிக், ஷா அகாடமி, அப்பல்லோ 24/7 மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் போன்றவற்றிற்கு சந்தாக்கள் வழங்கப்படுகிறது. அதோடு அன்லிமிடெட் லோக்கல்-எஸ்டிடி அழைப்பு வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.