உலகம் முழுதும், ஒரு மில்லியனுக்கும் மேலான தரவு மையங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் கூகுள், ஒரு நாளில் ஒரு பில்லியனுக்கும் மேலான தேடல்களைக் கையாள்வதாகவும், இருபத்துநான்கு பெட்டா பைட்டு அளவுள்ள தகவல்களைச் சேமிப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில்   குறைந்தது 2 வருடங்களாக பயன்படுத்தப்படாத கணக்குகளை நீக்கும் செயலை கூகுள் தொடங்கியுள்ளது.

மின்னஞ்சல், யூடியூப், டிரைவ் மற்றும் பிற கூகுள் கணக்குகளில் உள்ள புகைப்படங்கள் மற்றும் உள்ளடக்கங்கள் நீக்கப்படும் என்றும் இந்த பயன்படுத்தாத கணக்குகள் அனைத்தும் 2023ம் ஆண்டுக்குள் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களிடம் பயன்படுத்தாத கூகுள் கணக்குகள்