கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூரில் பிரவீன் ராணா என்பவர் சேப் அண்ட் ஸ்ட்ராங் மார்க்கெட்டிங் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவர் பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு கூடுதல் வட்டி தருவதாக கூறி ஏராளமானவர்களிடமிருந்து பணம் வசூலித்து 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்தார். இவர் மீது திருச்சூர் டவுன் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 22-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதனால் தலைமறைவாக இருந்த பிரவீனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தேவராயபுரம் பகுதியில் இருக்கும் கல்குவாரியில் தொழிலாளர்களுடன் ஒரு குடிசையில் சாமியார் தோற்றத்தில் பிரவீன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி கேரளா தனிப்படை போலீசார் அங்கு சென்று பிரவீனை அதிரடியாக கைது செய்து திருச்சூருக்கு கொண்டு சென்றனர்.