அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரது வீட்டில் இருக்கும் இலந்தை மரத்தில் 8 வயது சிறுமி இலந்தை பழம் பறிப்பது வழக்கம். கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இளங்கோவன் பழம் பறிக்க வந்த சிறுமியிடம் 10 ரூபாய் கொடுத்து மிட்டாய் வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து இளங்கோவன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதனால் அச்சத்தில் அவரிடமிருந்து தப்பித்து வீட்டிற்கு ஓடிவந்த சிறுமி நடந்தவற்றை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் இளங்கோவனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த அரியலூர் மகிளா நீதிமன்றம் இளங்கோவனுக்கு 1 1/2 லட்ச ரூபாய் அபராதமும், 17 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.