இந்தியப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்திக்கப் போவதாகவும், நாடு தழுவிய அளவில் பணவீக்கம் ஏற்படப் போவதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்து 100 ரூபாயை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகக் கவலை தெரிவித்துள்ளார்.

அதேபோல், தொழில் துறைக்கான எரிபொருள் விலையும் பெருமளவு உயர்ந்திருப்பது சாதாரண விஷயமல்ல என்றும், இவை வெறும் எண்கள் மட்டுமல்ல, நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கப் போவதற்கான தெளிவான அறிகுறிகள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விலைவாசி உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாகப் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக அவர் தனது எச்சரிக்கையில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.