கரூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, தேர்தல் விதிமுறைகளை முற்றிலுமாக மீறி, பள்ளிச் சிறுவர்களை வைத்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்கள் அதிமுக கட்சித் துண்டுகளை அணிந்தபடி பிரச்சாரத்தில் ஈடுபட்டது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தேர்தல் தொடர்பான பணிகளிலோ அல்லது பிரச்சாரத்திலோ குழந்தைகளையோ, சிறுவர்களையோ ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும்.
இந்த நிலையில், விதியை மீறி சிறுவர்களைப் பயன்படுத்திய விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருவதால், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
