செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  இஸ்லாமியர் இல்லாத….. ராமர் இல்லாத… ஏதாவது ஒரு அரசியல் இருக்கா ? ராமர் இல்லாத….  இஸ்லாமியர் எதிர்ப்பு இல்லாத அரசியல் இருக்கா ? ராமர்  கடவுள் எல்லாம் கிடையாது…  பிஜேபியின் உடைய பிராப்பர்ட்டி… அவங்க நெனச்சிட்டு இருக்காங்க…

ராமர் ஏதோ பிஜேபிக்கு மட்டும். அப்படிதான் ஆக்கி வச்சிருக்காங்க.  அவர் ஒரு கடவுள் மாதிரி கருதுகிறார்களா ? நீங்க மட்டும் பிஜேபியை ஜெயிக்க வைங்க இலவச தரிசனம் என சொல்லுறான். அவரும் இலவசமாக்கிட்டாரு… இந்த மாதிரி ஒரு அரசியல் கோட்பாடு உலகத்தில் எங்கேயாவது இருக்கா ? பிஜேபி கிட்ட கேளுங்க… தம்பி அண்ணாமலை கிட்ட கேளுங்க….

பசு மாடு,  பாகிஸ்தான் பக்கத்து நாடு….  ஜெய் ஸ்ரீ ராம் கோசம்…. இத மூணு விட்டா ஒரு கோட்பாடு சொல்லுங்கன்னு கேட்கிறேன்….  ஏதாவது ? இரண்டு கோடி பேருக்கு வேலை என சொன்னாங்க…  பத்தாண்டு முடிஞ்சு போச்சு…  அனாதையாக  தெருவுல திரியுறான்… எத்தனை பேருக்கு வேலை கொடுத்தீங்க ? முழுக்க ஏமாற்று…. மதம்,  கடவுள் இந்த  உணர்ச்சி சைனைட்,  அபின் இதைவிட படக்குன்னு போதை ஏறிடுது.. அந்த மயக்கத்திலே மக்களை வச்சுக்கிட்டு தகராறு….  இஸ்லாமியர்களை எதிர்க்கிறது என விமர்சனம் செய்தார்.