நடிகர் விஜய் சமீபத்தில் தனது கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். புதிய கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஜய் அரசியலுக்கு வருவதை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்த நிலையில் போஸ்டர் மற்றும் பேனருக்கு பேர் போன மதுரையில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதாவது அன்று சினிமாவில் நம்பர் 1 ஆக இருந்து அரசியல் பயணம் தொடங்கியவர் எம்ஜிஆர், இன்று சினிமாவில் நம்பர் 1 ஆக இருந்து அரசியல் பயணம் தொடங்குபவர் எங்கள் தளபதியார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.