குஜராத் மாநிலத்தில் உள்ள சபர் கந்தா மாவட்டத்தில் தன் சூரா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ஒரு சிறுமி. இவருக்கு 10 வயதாகிறது. இவர் அங்குள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் தாயின் செல்ஃபோனை தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார். இதில் இன்ஸ்டாகிராம் மூலமாக வேறொரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி சிறுமியை திடீரென காணவில்லை. இதனால் பதறிய அவரது தாயார் அருகில் உள்ள காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். இந்த விசாரணையில் அந்த சிறுமி இன்ஸ்டாகிராம் மூலமாக 16 வயது சிறுவனுடன் பழகி வந்தது தெரியவந்துள்ளது. மேலும் அந்த 16 வயது சிறுவனுடன் சென்றுள்ளார் என்பதும், இதற்கு அந்தப் 16 வயது சிறுவனின் நண்பர்கள் 3 பேர் உதவியதும் தெரிய வந்தது. பின்னர் காவல்துறை அந்த சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் 16 வயது சிறுவன் உட்பட அவனது 3 நண்பர்களையும் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்துள்ளனர். 10 வயது சிறுமி இணையதள காதலனை தேடிச் சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.