பெங்களூரின் விலைவாசி உயர்வைப் பற்றி ஒரு ரஷ்ய பெண்ணான யூலியா அஸ்லமோவா வெளியிட்ட வீடியோ இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக இந்தியாவின் தொழில்நுட்ப மையமான பெங்களூரில் வசிக்கும் இவர், இன்ஸ்டாகிராமில் தனது மாதாந்திர செலவுகள் குறித்து பகிர்ந்துள்ளார்.
இதில், மூன்று பேர் கொண்ட அவரது குடும்பத்தின் மாத செலவு சுமார் 3 லட்சம் ரூபாய் எனக் கூறியுள்ளார். இதில் வாடகைக்கு 1.25 லட்சம், உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 75,000, பள்ளி கட்டணத்திற்கு 30,000, உடல்நலம் மற்றும் உடற்பயிற்சிக்கு 30,000, பெட்ரோலுக்கு 5,000 ரூபாய் செலவாகுவதாக விவரித்துள்ளார். இந்த வீடியோவை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து, பலரும் அதிர்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
ஆனால், யூலியாவின் வீட்டுவேலைக் பெண்ணுக்கு மாதம் 45,000 ரூபாய் சம்பளம் கொடுப்பதாகக் கூறியது பார்வையாளர்களை தலைகீழாக நிறுத்தியது. ஒரு பயனர் கிண்டலாக, “நீங்கள் தாஜ் ஹோட்டலில் வசிக்கிறீர்களா?” எனக் கேட்டார்.
மற்றொருவர், “வாடகை 1.25 லட்சமா? இது தவறுதலாக எழுதியதல்லவா?” என்று வினவினார். இன்னொருவர், “இவர் ஒரு மாதத்தில் என் ஆண்டு சம்பளத்தை செலவழிக்கிறார்” எனக் குறிப்பிட்டார்.
யூலியா, 11 ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் 2BHK வீடு 25,000 ரூபாய்க்கு கிடைத்ததாகவும், ஆனால் இப்போது மூவர் குடும்பம் வசதியாக வாழ குறைந்தபட்சம் 2.5 லட்சம் தேவைப்படுவதாகவும் கூறினார்.
இருப்பினும், சிலர் யூலியாவின் ஆடம்பர வாழ்க்கை முறையே இந்த உயர் செலவுக்கு காரணம் எனவும், வேலைக்காரிக்கு 45,000 ரூபாய் சம்பளம் என்பது புதிய விவாதத்தை தூண்டியுள்ளது என்றும் கருத்து தெரிவித்தனர்.
