மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குச் சொந்தமான ஹைதராபாத் இல்லத்தை அந்த நாட்டு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக முடக்கியுள்ளனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீநகர் காலனி (வெங்கடேஸ்வரா ஹில்ஸ்) பகுதியில் ஜெயலலிதாவின் பெயரில் ஒரு பிரம்மாண்ட இல்லம் உள்ளது.

இந்த இல்லத்திற்கு நீண்ட காலமாகச் சொத்து வரி செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. பலமுறை நினைவூட்டல் கொடுத்தும் வரி பாக்கி கட்டப்படாததால், இன்று அதிரடி நடவடிக்கையில் இறங்கிய ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகள், அந்த இல்லத்தை முடக்கி நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

இந்தச் செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.