திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வசித்து வருபவர் மகேஷ் அரவிந்த் (35). இவர் தனது மனைவியால் தான் ஏமாற்றப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது சந்தியா என்ற பெயரைக் கொண்ட அந்தப் பெண் 50-க்கும் மேற்பட்டவரை திருமணம் செய்து அவர்களை ஏமாற்றி நகை மற்றும் பணம் உள்ளிட்டவற்றை அபேஸ் செய்து தப்பித்தது தெரியவந்தது.

மாடு மேய்ப்பவரில் இருந்து காவல்துறையினர் என பல தொழிலதிபர்கள் சந்தியாவிடம் சிக்கி ஏமாந்துள்ளனர். இதுவரை 52 பேரை அவர் ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.