தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் ரமேஷ் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு 83 வயது ஆகிறது. திறமைக்கும் வயது தடை இல்லை என்பது போன்று நடந்த பல சம்பவங்களை நாம் கேள்வி பட்டிருப்போம். அந்த வகையில் 83 வயதிலும் ரமேஷ் 50 மாரத்தான்களில் ஓடி சாதனை படைத்துள்ளார்.
தனக்கு 100 வயதாகும் வரை ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் தனது ஆசை என முதியவர் கூறியுள்ளார். மேலும் காலை நான்கு மணிக்கு எழுந்து நடை பயிற்சி, உடற்பயிற்சிகளை செய்து உடலை கச்சிதமாக வைத்திருப்பதாக முதியவர் தெரிவித்துள்ளார்.
