வாட்ஸ் அப் பயனர்களுக்கு விருப்பமான chat-களை தேர்வு செய்யும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்கிறது. தகவல் பரிமாற்றங்களுக்காக பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ் அப் செயலி அடிக்கடி புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகின்றது. அதன்படி தற்போது பயனர்களுக்காக favourite chats என்ற புதிய அம்சம் விரைவில் அறிமுகமாக உள்ளது. அதன்படி all chats, unread chat and favourite chats என மூன்று புதிய tab-களும் உருவாக்கப்பட உள்ளன.