இன்றைய காலகட்டத்தில் instagram மற்றும் whatsapp உள்ளிட்ட செயலிகளை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவித அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்ஸ்டாகிராம் நிறுவனம் அடிக்கடி ஸ்டோரி மற்றும் ரீல்ஸ் பதிவிடும் முறையில் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.

தற்போது இன்ஸ்டாகிராம் நிறுவனம் நோட் பதிவிடும் முறையில் சில மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. தற்போது வரை DM பக்கத்திற்கு மேல் நோட் பதிவிடும் அம்சம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதனை எளிதாக்கும் வகையில் ப்ரொபைல் பக்கத்திற்கு அந்த நோட் அம்சத்தை மாற்றி அமைத்துள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலம் பயனர்களின் நோட் குறிப்புகளை அவர்களின் ப்ரொபைல் பக்கம் மூலமாக அறிந்து கொள்ள முடியும்.