இந்திய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி 49 ரூபாய் விலையுள்ள டேட்டா சேவை திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ள நிலையில் மூன்று மடங்கு அதிக டேட்டாவை வழங்க உள்ளது. இதற்கு முன்பு 49 ரூபாய் திட்டத்தில் டேட்டா பேக்கை ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளுக்கு மட்டும் கூடுதலாக ஆறு ஜிபி டேட்டா கிடைக்கும். இதனை தங்களுடைய வழக்கமான டேட்டாவை முடித்தவுடன் மட்டுமே பயனர்கள் பயன்படுத்த முடியும். தற்போது திருத்தப்பட்ட திட்டத்தில் 49 ரூபாய் விலையிலான டேட் ஆப் பேக்கை ரீசார்ஜ் செய்யும்போது 20 ஜிபி அளவிலான FUP டேட்டா கிடைக்கும்.

இது 64 கே பி பி எஸ் என்ற அளவிலான இன்டர்நெட் வேகத்தில் பயனர்களுக்கு கிடைக்கும் என்றும் இதனை பயனர்கள் தங்களுடைய வழக்கமான டேட்டா பேக் முடித்த உடனே ஒரு நாள் மட்டுமே பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே 99 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் டேட்டா பேக்கையும் அறிமுகம் செய்துள்ளது. இதனை பயனர்கள் ஒரு நாளுக்கு இருவது ஜிபி டேட்டா என்ற விதம் 40 ஜிபி இரண்டு நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.