இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்கள் மத்தியில் ஆன்லைன் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. இதற்காக கூகுள் பே மற்றும் போன் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதற்குப் போட்டியாக இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பீம் செயலையும் தற்போது களத்தில் இறங்கியுள்ளது. இந்த செயலி மக்களின் கவனத்தை ஈர்க்க 150 ரூபாய் மற்றும் 600 ரூபாய் என மொத்தமாக 750 ரூபாய் மதிப்பிலான கேஷ்பேக் மற்றும் ஒரு சதவீதம் மதிப்பிலான கேஷ்பேக்கை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது 150 ரூபாய் மதிப்பிலான கேஷ்பேக்கை பெற விரும்பும் நபர்கள் உணவகங்கள் மற்றும் ரயில் டிக்கெட் முன்பதிவு ஆகிய பயணங்களுக்காக இந்த செயலியின் யு பி ஐ ID மூலம் 100 ரூபாய்க்கு மேலான பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 30 ரூபாய் வீதம் ஐந்து முறை இந்த கேஷ் பேக் உங்களுக்கு வழங்கப்படும். அதனைப் போலவே 600 ரூபாய் மதிப்பிலான கேஷ் பேக் இரண்டு பிரிவுகளாக வழங்கப்படும் எனவும் இதனை பெறுவதற்கு பயனர்கள் பீம் செயலியுடன் ரூபே கிரெடிட் கார்டை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 100 ரூபாய்க்கு மேல் மேற்கொள்ளப்படும் முதல் மூன்று பரிவர்த்தனைகளுக்கு 100 ரூபாய் வீதம் மூன்று முறை இந்த கேஷ் பேக் உங்களுக்கு வழங்கப்படும்.

அதனைப் போலவே 200 ரூபாய்க்கு மேல் மேற்கொள்ளப்படும் முதல் 10 பரிவர்த்தனைகளுக்கு 30 ரூபாய் என்ற வீதம் 10 முறை இந்த கேஷ் பேக் உங்களுக்கு கிடைக்கும். அது மட்டுமல்லாமல் எரிபொருள் கட்டணம், மின் கட்டணம், வீட்டு வரி மற்றும் தண்ணீர் வரி ஆகியவற்றுக்கு இந்த செயலியின் யு பி ஐ ஐ டி மூலமாக 100 ரூபாய்க்கும் மேற்பட்ட பண பரிவர்த்தனையை மேற்கொள்ளும் போது ஒரு சதவீதம் கேஷ் பேக் உங்களுக்கு ஆபராக வழங்கப்படும். இவை அனைத்துமே மார்ச் 31 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.