விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டவுனில் கிளினிக் வைத்து, சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை எளிய மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்த டாக்டர் ராஜசேகர் (எ) கண்ணன் (65), நேற்று நள்ளிரவு உடல்நலக் குறைவால் காலமானார். 1980-களில் தனது மருத்துவச் சேவையைத் தொடங்கிய இந்தச் சமூக சேவகர், தனது வாழ்நாள் முழுவதும் கட்டணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் மருத்துவம் பார்த்தார். சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக, நோயாளிகளிடம் ஆரம்பத்தில் 10 ரூபாய், 20 ரூபாய், அதிகபட்சமாக 50 ரூபாய் மட்டுமே கட்டணமாக வாங்கிக் கொண்டு சிகிச்சை அளித்து வந்தார்.

இவருடைய இந்த உன்னத சேவையைப் பாராட்டி, மக்கள் இவரை அன்போடு ‘ஏழைகளின் மருத்துவர்’ மற்றும் ‘ரூ.50 மருத்துவர்’ என்று அழைத்து வந்தனர். அவரது மறைவு ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.