அரியானா மாநிலத்தின் ஜிந்த் பகுதியைச் சேர்ந்த, டெல்லியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பயிலும் 18 வயது இளம்பெண் ஒருவர், மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது20 வயது இளைஞர் ஒருவர், போட்டித் தேர்வுகளுக்கு தயாறிக்கொண்டிருந்தார். இவர், செப்டம்பர் 9ஆம் தேதி, தனது இரண்டு நண்பர்களுடன் ஒன்றாக விருந்து வைப்பதாகக் கூறி, அந்த பெண்ணை டெல்லியின் ஆதர்ஷ் நகரில் உள்ள ஓர் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அங்கு, குளிர்பானத்தில் போதைப்பொருள் கலந்து கொடுத்ததால், மாணவி சுயநினைவை இழந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, முதலில் அந்த இளைஞர், பின்னர் மற்ற இருவர், மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அந்த செயலை வீடியோவாக பதிவுசெய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு மேலுமாக, அந்தக் கொடூர வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி, செப்டம்பர் மாதம் முழுவதும் தொடர்ந்து பலமுறை மாணவியிடம் பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
ஒரு மாதத்துக்கு மேலாக மனவேதனையில் வாடிய மாணவி, இறுதியாக டி, தனது பெற்றோரிடம் சம்பவத்தை தெரிவித்தார். அதன் அடிப்படையில், கடந்த அக்டோபர் 2ஆம் தேதி, டெல்லி போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், மாணவியின் வாக்குமூலத்தையும் பெற்று, மூன்று இளைஞர்கள் மீது பாலியல் வன்கொடுமை தொடர்பான பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது அவர்கள் தலைமறைவாக இருப்பதால், அவர்களை பிடிக்க டெல்லி போலீசார் சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளனர்.
