உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் முரத்நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒரு 22 வயது இளம் பெண் கொடுத்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதில், “ரகுல்” என்ற பெயரில் தன்னை அறிமுகப்படுத்திய இளைஞர் ஒருவர் வேலை வாய்ப்பு கூறி தன்னை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அந்த சம்பவத்தின் வீடியோ பதிவு செய்து பின்னர் அதைப் பயன்படுத்தி பலமுறை  அழைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், பின்னர் தான் அந்த இளைஞரின் உண்மையான பெயர் ஜுபேர் அலி என்பதும் தெரியவந்தது என கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.

தொடர்ந்து, ஜுபேர் வீடியோவை காட்டி மிரட்டி, மீண்டும் மீண்டும் ஹோட்டலுக்கு அழைத்துப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்த இளைஞர் பெண்ணின் வீட்டிலிருந்து தங்க மோதிரம், கம்மல் , வெள்ளி நகை, இரு செல்போன்கள் ஆகியவற்றை அபகரித்ததாகவும் கூறியுள்ளார். பெண் எதிர்ப்பு தெரிவிக்கையிலேயே, “போலீசில் புகார் கொடுத்தால் நான் சிறையிலிருந்து வந்த உடனே உன்னையும், உன்னோட குடும்பத்தையும் கத்தியால் வெட்டிவிடுவேன்” என கொடூரமாக மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக,பல  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துணை ஆணையர் அலோக் பிரியதர்ஷி தெரிவித்ததாவது, “முக்கிய சாட்சிகள் சேகரிக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் ஜுபேர் அலி கைது செய்யப்பட்டுள்ளார்” என கூறினார்.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி, இது ‘லவ் ஜிஹாத்’ சம்பவம் எனக் கூறி இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு, கடுமையான தண்டனை கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.