ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ் சம்ந்த் பகுதி உள்ளது. இந்த நகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக சச்சின் என்ற 27 வயது வாலிபர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த சனிக்கிழமை அந்த பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்காக சென்றார். அவர் சாப்பிட்ட பிறகு பில் செலுத்த கவுண்டருக்கு போனார். அவரிடம் ஹோட்டல் ஊழியர் பில்லை கொடுத்த நிலையில் தன்னுடைய பர்சிலிருந்து பணத்தை எடுத்தார். அப்போது திடீரென சரிந்து கவுண்டரில் சச்சின் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் உடனடியாக சச்சினை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு சச்சினை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துவிட்டனர். அதாவது மாரடைப்பின் காரணமாக வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். சமீபகாலமாக இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது ஹோட்டலில் வைத்து ஒரு வாலிபர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.