உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள காசிப்பூர் மாவட்டத்தில் அபிஷேக் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிஐஎஸ்எஃப் பெண் அதிகாரி ஒருவர் தன்னுடன் உறவில் இருந்ததாகவும் ஆனால் தற்போது தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் பரபரப்பு குற்றசாட்டினை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டு விபரீத முடிவு எடுத்துள்ளார். அதாவது சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் 35 வயதான அபிஷேக் சிங் வேலை பார்த்து வந்த நிலையில் இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த அந்த பெண் அதிகாரியுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் மத்திய அரசின் அதிகாரியாக இருக்கும் நிலையில் அவரின் பூர்வீக ஊர் குஜராத் மாநிலம். இவர்கள் இருவரும் செல்போன் நம்பர்களை பரிமாறி பேசி வந்த நிலையில் அடிக்கடி மங்களூர் சென்று அபிஷேக் அந்த பெண்ணை பார்த்ததோடு தனிமையில் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் சென்னையில் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்த அபிஷேக் மங்களூருக்கு குடி பெயர்ந்தார். அங்கு தன்னுடைய காதலியுடன் ஒரு வீட்டில் தங்கினார். இதில் அபிஷேக் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார். ஆனால் அந்தப் பெண் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் அபிஷேக் தொடர்ந்து அந்த பெண்ணை வற்புறுத்தியதால் அவர் ஏற்கனவே தனக்கு திருமணமாகி குழந்தை இருப்பதை கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த அபிஷேக் மீண்டும் சென்னைக்கு திரும்பி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அவர் தன்னை ஏமாற்றிய அந்த பெண் உல்லாசத்திற்கு மட்டும் தன்னை பயன்படுத்தியதாக மிகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அபிஷேக் அந்த பெண்ணிடம் அடிக்கடி கூறிய நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அந்த பெண் இனிமேல் தனக்கு தொடர்பு கொள்ள வேண்டாம் என கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் அவர் மீண்டும் மங்களூருக்கு சென்றார். அவர் அங்கு ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி தன்னை ஏமாற்றிய அந்த பெண் அதிகாரி பற்றி கூறியதோடு பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
