உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூரில் ஒரே பொதுத்துறை வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு கடந்த சனிக்கிழமை நஜ்மா கானா என்ற ஒரு முஸ்லிம் பெண் சென்றுள்ளார். இவர் தன்னுடைய வங்கிக் கணக்கில் இருந்து 5 லட்சம் ரூபாய் பணத்தை எடுப்பதற்காக சென்றார். அந்தப் பெண்ணுக்கு வயதாகி விட்டதால் தன்னுடைய மகனை உடன் அழைத்து சென்றார். இந்த வங்கியில் காசாளராக மனோஜ் குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த வயதான முஸ்லீம் பெண்மணிக்கு பணம் வழங்க முடியாது என்று கூறியுள்ளார். உடனடியாக அந்த பெண்ணும் அவருடைய மகனும் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை தர மறுப்பது ஏன் என்று கேட்டடனர்.
உடனே மனோஜ் குமார் அவர்களிடம் மோசமான முறையில் நடந்து கொண்டார். இதனை அந்த பெண்ணின் மகன் தன் செல்போனில் வீடியோ எடுக்க முயன்ற நிலையில் அவருடைய செல்போனையும் பறிக்க முயன்றார். பின்னர் மேனேஜரிடம் புகார் தெரிவிக்க அந்தப் பெண்ணும் அவருடைய மகனும் சென்ற நிலையில் அங்கு சென்றும் மனோஜ் குமார் தகராறில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை பார்த்த பலரும் மனோஜ் குமாரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
A video from Union Bank of India, #Rampur, #UttarPradesh, has gone viral showing a #Muslim woman being denied the withdrawal of 5 lakh rupees.
The incident reportedly occurred when her son accompanied her for security reasons.
When the son filmed the cashier’s refusal and… pic.twitter.com/YgDp6Vxwkc
— Hate Detector 🔍 (@HateDetectors) March 4, 2025
