தெலுங்கானா மாநிலத்தில் மல்லரெட்டி-ராதிகா தம்பதியினர் வசித்து வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு சந்தீப் ரெட்டி மற்றும் கார்த்திக் ரெட்டி (26) ஆகிய இரு மகன்கள் இருக்கும் நிலையில் சந்தீப்புக்கு திருமணமாகி மனைவி இருக்கிறார். இதில் சந்தீப் படித்து முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நிலையில் கார்த்திக் பி.டெக் முடித்துவிட்டு வேலை இல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் அவர் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் கார்த்திக் வேறு இடத்தில் தங்கி இருந்த நிலையில் அவரை தவிர மற்றவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் இருந்தனர். இருப்பினும் கார்த்திகை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு நல்வாழ்வு மையத்தில் அவரை அனுமதித்த நிலையில் பின்னர் கார்த்திக் வீட்டிற்கு வந்தார்.
அவர் தன் நடத்தையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் பெற்றோருடன் அடிக்கடி சொத்தில் தனக்குரிய பங்கை தருமாறு கேட்டுள்ளார். அதாவது 100 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கூறப்படும் நிலையில் அதில் பாதியை தருமாறு பெற்றோரிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்த நிலையில் சொத்தை மொத்தமாக அடைய வேண்டும் என்பதற்காக கார்த்திக் தன் குடும்பத்தை கொலை செய்ய நினைத்தார். இதற்காக அவர் தன் தாயை தூங்கிக் கொண்டிருக்கும் போது கத்தியால் குத்தி கொலை செய்த நிலையில் தன்னுடைய தந்தை அண்ணன் அண்ணி ஆகியோரையும் கொலை செய்ய முயன்றார். ஆனால் அவர்கள் உயிர் தப்பிவிட்டனர். இதற்காக கார்த்திக் ஆன்லைனில் மொத்தம் ஆறு கத்திகளை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
