சீனாவில் ஒரு பெண்ணுக்கு உதவி செய்த மருத்துவர் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 45 வயதான மருத்துவர் பான் என்பவர் கடந்த 12ஆம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது ஒரு இளம் பெண் மயக்கமடைந்து தெருவில் விழுந்து கிடந்தார்.

உடனடியாக டாக்டர் பான் அந்த பெண்ணிற்கு சி பி ஆர் உதவி செய்து உயிரை காப்பாற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் டாக்டர் பான் அந்த பெண்ணின் மார்பு பகுதியை  தொட்டதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். இது குறித்து பேசிய டாக்டர் பான் எந்த ஒரு நிபுணர்களும் தன்னை பற்றி அப்படி சொல்லவில்லை எனவும் இந்த விமர்சனங்களால் நான் மிகவும் பயந்துவிட்டேன் எனவும் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் இப்படி விமர்சனங்கள் வரும் என்று தெரிந்திருந்தால் அதை பெண்ணுக்கு நான் உதவியே செய்திருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் சிபிஆர் செய்து ஹீரோ போல் காப்பாற்றிய ஒரு மருத்துவர் தற்போது இணையதளத்தில் வில்லன் போல் சித்தரிக்கப்படும் நிலையில் இதில் யார் மீது தவறு என்பது தான் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பெரிய கேள்வியாக மாறியுள்ளது.