திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி பிரசாந்த்(24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமி திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்தனர். மேலும் சிறுமிக்கு 17 வயது தான் ஆகிறது என்பதை அறிந்த டாக்டர்கள் திருத்தணி மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி பிரசாந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.