கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடமுண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் இவரது மனைவி செல்லியம்மாள். இந்த தம்பதியினரின் மகன் நாராயணனுக்கு செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இதனால் நாராயணன் தனது பெற்றோருடன் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் திருக்கோவிலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.