​இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவர் கையிலும் செல்போன் இருப்பதால், சமூக வலைதளங்களில் எது எப்போது வைரலாகும் என்றே தெரியவில்லை. அந்த வகையில், தற்போது எக்ஸ் (X) தளத்தில் ஒரு நபர் உயரமான மலை உச்சியில் இருந்து பறக்க முயற்சிக்கும் வீடியோ தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு இளைஞன் தனது உடலில் செயற்கையான சிறகுகளைப் பொருத்திக்கொண்டு, பறவையை போல பறக்க ஆசைப்பட்டு மலையின் விளிம்பிலிருந்து ஓடி வந்து குதிக்கிறான். ஆனால், அவன் நினைத்தது போல பறக்க முடியாமல், மலையிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைகிறான்.

கீழே விழுந்த வேகத்தில் வலியால் அவன் தனது இடுப்பைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்கும் காட்சிகள் பார்ப்பவர்களைப் பதறவைப்பதோடு, சிலரைச் சிரிக்கவும் வைத்துள்ளது. இந்த வீடியோவை ‘MAMAYIWE’ என்ற கணக்கில் பகிர்ந்த பயனர், நகைச்சுவையாக “முடிவு வரை காத்திருந்து பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே லட்சக்கணக்கானோர் பார்த்துள்ள இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பலவிதமான கமெண்ட்களைத் தட்டி வருகின்றனர்.

“ஏன் இப்படி எல்லாம் செய்கிறார்கள்?” என்று ஒரு பயனர் கேள்வி எழுப்ப, மற்றொருவரோ “பறப்பது என்பது விமானங்களுக்கு மட்டுமானது அல்ல” என்று கிண்டல் செய்துள்ளார். “லேண்டிங் மட்டும் கொஞ்சம் புரொபஷனலாக இருந்திருக்கலாம்” என்றும், “பேட்மேன் கூட இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்” என்றும் நெட்டிசன்கள் இந்த விபரீத சாகசத்தைக் கலாய்த்து வருகின்றனர். இதுபோன்ற ஆபத்தான முயற்சிகளில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.